
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை தீவிர போரட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, அண்மைய நகரங்களில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், போராட்டத்தினை வெற்றியுடன் நிறைவு செய்ய முடியுமெனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.