
எரிபொருள் விலையை குறைக்க சிபெட்கோ நிறுவனம் தீர்மானத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 450 ரூபாவாகும்.
அத்துடன் 95 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 540 ரூபாவாகும்.
இதேவேளை ஒட்டோ டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 440 ரூபாவாகும்.
மேலும் சுப்பர் டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 510 ரூபாவாகும்.