ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பணவீக்க அறிக்கையில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பணவீக்க சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதன்படி, பணவீக்கக் சுட்டெண்ணில் ஜிம்பாப்வே முதல் இடத்தில் இருக்கும் அதே வேளையில் துருக்கி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கின் அவர்களால் உலகப் பொருளாதார நிலைமை குறித்து மாதந்தோறும் பணவீக்கக் சுட்டெண் வெளியிடப்படுகிறது, இது உலகின் முக்கிய பணவீக்க பகுப்பாய்வு அளவுகோலாகக் கருதப்படுகிறது.
இதில் வெனிசுலா நான்காவது இடத்திலும், லெபனான் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் 12வது இடத்திலும் உள்ளன.