இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அறிக்கையொன்றினூடாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுடன் தாம் ஒன்றிணைந்து இருப்பதாகவும் அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கண்டனம் வௌியிட்டுள்ளார்.
வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அமைதியைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.