
ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் போராட்டகாரகள் தங்களை ஆசுவாசப்படுத்தி நீச்சலடிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டகாரகள் இன்று ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது ஜனாதிபதி கோட்டபாய அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படும் நிலையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் இளஞர்கள் சிலர் குளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.