
அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் ளெியாகியுள்ளன.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இன்றைக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த பகுதிகளில் தற்போது பாரிய போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள் அலையென திரண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.