ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

பொலிஸாரின் தடைகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேற முயற்சித்த நிலையிலேயே பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பொல்துவ சந்தி, ஜப்பான் நட்புறவு வீதி, பத்தரமுல்லை வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.