அர்ஜென்டினாவில் நெருக்கடி; நிதி அமைச்சர் ராஜினாமா

அர்ஜென்டினாவில், டாலருக்கு நிகரான அந்நாட்டின் கரன்சியான, ‘பெசோ’வின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, அந்நாட்டு நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் அதிகாரப்பூர்வ கரன்சியான பெசோவின் மதிப்பு, டாலருக்கு எதிராக கடும் சரிவை சந்தித்துள்ளதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு தேவையான அமெரிக்க டாலரை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முறைசாரா சந்தையில், டாலருக்கு நிகரான மதிப்பு, 239 பெசோவாக குறைந்தது. இதனால், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நிலைமை கைமீறிப் போன நிலையில், அர்ஜென்டினாவின் நிதித்துறை அமைச்சர் மார்ட்டின் குஸ்மான், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.