இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘உழவாரப் போர்’ வேலைத்திட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியை இணைத்துக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் தலைமையில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு குழு மீதான விவாதத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் அதிகாரிகள் குழு கலந்துகொண்டது.
“எங்கள் மக்களுக்குத் தேவையான உணவை நாங்கள் வழங்க வேண்டும், அவர்களிடம் பணம் இல்லையென்றால், நாங்கள் அதை ஆதரிக்க வேண்டும், நாங்கள் திட்டத்தைத் தொடங்கி முழு நாட்டையும் ஒன்றிணைக்க வேண்டும்.
இதை நாங்கள் செய்ய முயற்சிக்க வேண்டும் என பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.