
லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்து 7,500 மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான பணப்பரிமாற்றமும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்காவிட்டால் இன்று (30) சில புகையிரத பயணங்களை இரத்து செய்ய நேரிடும் என புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.