ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சியை ஏற்க தமது கட்சி தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறியமை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய அவர், எந்த தவறும் செய்யாத 22 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் எந்தவொரு நிதியுதவியும் அவர்கள் வழங்கப் போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர்களின் இயலாமை நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை அவர்களுக்கு எதிராக நாளை முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.