
இரும்பு இதயம் படைத்த ஒருவரால் மட்டுமே நாட்டினை இந் நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியும் எனவும் அவ்வாறான பணியொன்றையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடிகள் மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாதிருந்த நிலையில் இன்று பலமான நாடுகளின் ஆதரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்று வருகின்றார். அதனால் சில முக்கிய வெற்றிகள் எமக்கு கிடைத்துள்ளன என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை, அதன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், சர்வதே நாடுகளின் தலைவர்கள்,பலர் இலங்கை குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாகவும், அமெரிக்கா நிதி உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஆக நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.