
அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை விடவும், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்கள் மற்றும் அரிசியைப் பதுக்கி வைப்பவர்கள் மீதான சுற்றிவளைப்புக்களை துரிதப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவர்கள் மீதான சுற்றிவளைப்பை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய மஹிந்த!
நேற்று அகில இலங்கை தொழிலற்றோர் சங்கத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறித்த சுற்றிவளைப்புக்களை துரிதப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுமாயின், பாதுகாப்புத் தரப்பினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகளின் தொழிலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அகில இலங்கை தொழிலற்றோர் சங்கத்தினர் இதன்போது அமைச்சரிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.