நாட்டின் நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கான தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை சீனா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong சந்தித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சீன தூதரகம், இந்த சந்திப்பின் போது, மானியங்கள், வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
முதிர்ச்சியடைந்த கடன்களை சரியான முறையில் கையாள்வதற்காக சீன வங்கிகளும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முயற்சிகள் மற்றும் திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து சீனத் தூதுவருடன் பிரதமர் ரணில் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கூட்டு முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை இரு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உத்வேகத்தை உருவாக்குவதற்கு இரு தரப்பினரும் தமது கட்டுமானம் மற்றும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.