
பொசன் பூரணை தினமான எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விடுதிகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் என்பனவும், பொசன் பூரணை தினத்தில் மூடப்பட வேண்டும்.
அத்துடன், சிறப்பு அங்காடிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படக்கூடாது என்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.