
2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 288,645
கடவுசீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 52,278 கடவுசீட்டுகளும், பிப்ரவரியில் 55,381 கடவுசீட்டுகளும் , மார்ச்சில் 74,890 கடவுசீட்டுகளும் , ஏப்ரலில் 53,151 கடவுசீட்டுகளும் , மே மாதத்தில் 52,945 கடவுசீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.