இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளதாார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடன் இல்லாத வெளிநாட்டு செலாவணியை முடியுமானளவு நாட்டுக்கு கொண்டுவரவேண்டி இருக்கின்றது.
இந்நிலையில், வெளிநாடுகளில் தொழில் செய்பவர்கள் தங்கள் பணத்தை சட்ட ரீதியாக, வங்கி ஊடாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
டொலர் பிரச்சினை காரணமாக மருந்து பொருட்களை கொண்டுவருவதற்கு முடியாமல் நோயாளர்கள் ஆபத்தான நிலைக்கு ஆளாகி உள்ளனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஜப்பான் நாடுகளில் தொழில் வாய்ப்பு கிடைத்த குழுவொன்றுக்கு விமான பற்றுச்சீட்டு கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (01-05-2022) தொழில் அமைச்சில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.