ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு தமிழகத்தின் வேலூர் மத்திய சிறையில் 14 ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சிறைக் கைதிகள் உரிமை மையம் அவசர மனு அனுப்பியுள்ளது.
வேலூா் மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தன்னை பிணையில் விடுவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தண்ணீர் கூட அருந்தால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் முருகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது நிலை குறித்து அரசியல் தலைவர்களும் முதல்வரிடம் வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக் கைதிகள் உரிமை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.