
பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப்பகுதியில் பாராளுமன்ற நுழைவு வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பல்வேறு வீதிகள் இன்றும் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய , தியத்த உயன சந்தியிலிருந்து பொல்துவ சந்தி ஊடாக ஜயந்திபுர சந்தி வரையான பாராளுமன்ற வீதியும், ஜயந்திபுர சந்தியிலிருந்து கியன்னம் சந்தி வரையிலான பகுதிகளும் இவ்வாறு மூடப்படவுள்ளன.
குறித்த பகுதிகளில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவலக பணியாளர்கள் பயணிப்பதற்கு பாரிய இடையூறு ஏற்படுவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.