எரிபொருள் விலை அதிகரிப்பு – பல பகுதிகளில் போராட்டம்

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் திகன பிரதேசத்தில் எரிபொருள் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று (19) காலை பிரதேசவாசிகள் எரிபொருளைக் கோரி போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE