அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணைகளுக்கு ஆதரவு கிடைக்குமாயின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.