இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாட்டில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நோக்கமே முக்கிய காரணம் எனவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இலங்கை உள்நாட்டு வருவாய் திரட்டலை வலுப்படுத்துவதன் மூலம் நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும். கடனை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கையும் கண்டறிய வேண்டுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.