உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் உக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது.
உக்ரேனின் 7.5 மில்லியன் குழந்தைகளில் 4.8 மில்லியன் பேர் மிகக் குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்திருப்பது, 31 வருட மனிதாபிமானப் பணியில் நடந்ததை பார்க்காத ஒன்று என்று யுனிசெப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மேனுவல் ஃபோன்டைன் தெரிவித்துள்ளார்.
“தங்கள் வீடுகளில் தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்ட 3.2 மில்லியன் குழந்தைகளில், ஏறக்குறைய பாதி பேர் போதிய உணவு இல்லாமல் ஆபத்தில் உள்ளனர் என்று ஃபோன்டைன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார்.