
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய இன்று மாலை குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இடைகால அரசாங்கம் தொடர்பிலான கலந்துரையாடல் இந்த சந்திப்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.