நாட்டுக்கு அவசியமான சந்தர்ப்பத்தில் இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடமும், எதிர்க்கட்சியிடமும் கோரியுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு ஜனநாயக ரீதியில், அரசியல் அமைப்புக்கு உட்பட்டு தீர்வு தேட வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தமது நாட்டு அரசாங்க நிதியின் பொறுப்பாளர்கள் என்றும், அந்தப் பொறுப்பிலிருந்து தாங்கள் விலக முடியாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.