
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முடிவை அரசாங்கம் ஆதரித்தது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஏனைய பொதுச் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததை அடுத்து, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது என கூறினார்,
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் வர்த்தமானியை நேற்று நள்ளிரவு முதல் இரத்துசெய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.