
இன்று நாடாளுமன்ற உரையில் முஷாரப் எம்.பி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுத்து பேசியபோது, அருகில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , முஷாரப் இற்கு 5000 ரூபா பணத்தை நீட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சபையில் களேபரம் ஏற்பட்டதுடன் ஆளுங்கட்சி எம்.பிக்கள் இதன்போது சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டதாக கூறப்படும் நிலையில், குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.