உக்ரைன் சார்பில் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தொழிலதிபர், எம்பி உள்ளிட்ட 3 பேரின் உடலில் விஷத்தன்மை உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அமெரிக்காவிற்குள் நுழைந்த 35 ரஷ்யர்கள் அந்நாட்டு எல்லையில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
உக்ரைன் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் செல்சியாவின் கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிச் , உக்ரைன் எம்.பி ருஸ்டெம் உமெரோ உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். மார்ச் 3ம் திகதி உக்ரைன் தலைநகர் கீவ்வில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டனர்.
இந்த முறைசாரா பேச்சுவார்த்தையின் போது, அப்ரமோவிச், ருஸ்டெம் உமெரோ உள்ளிட்ட 3 பேருக்கு திடீரென உடல்நலம் குன்றியது.
அதையடுத்து போலந்துக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டனர். பின்னர் இஸ்தான்புல்லில் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
தற்போது நலமுடன் உள்ள அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு முன்னால் அவர்களின் கண்கள் சிவந்து பார்வை இழந்து இருந்தன. தோலில் ஆங்காங்கே சிவந்து காணப்பட்டது.
உடல் வலி இருந்தது. அவர்களின் முகம் மற்றும் கைகளின் தோல் உரிந்தன என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. இருந்தாலும் தற்போதைய சூழலில் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.