மேலும் 34,000 மெட்ரிக் டொன் டீசலை இந்திய கடன் வரியின் கீழ் இலங்கைக்கு வழங்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
மார்ச் மாதம் 31 ஆம் திகதி நாட்டிற்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் மேலும், மீனவர்களுக்கான எரிபொருள் சலுகைத் திட்டம் எதிர்காலத்தில்வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வாறானதொரு வேலைத்திட்டம் ஏற்படுத்தப்பட்டால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.