
மலையகம் மற்றும் வடக்கு ரயில் மார்க்க நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான ஆசன ஒதுக்கீட்டின் கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில், இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி, ரயில் திணைக்கள ஆசன ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்ததுடன், பின்னர் போக்குவரத்து அமைச்சரினால் அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.