இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இம்மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் 28 – 30 ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.