வாகன இறக்குமதி தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, வாகனங்களை டொலரில் திருப்பி அனுப்புவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தாம் முன்வைத்த முன்மொழிவை பரிசீலிக்க முடியுமா என தொலவத்த கேள்வி எழுப்பியுள்ளார்.
இது அதிகரித்து வரும் வாகனங்களின் விலையைக் குறைக்கவும், டொலரில் வரி செலுத்துவதால் அரசுக்கு டொலரை வழங்கவும் உதவும் என்றார்.