உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக நேட்டோ நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க நட்பு நாடுகள் பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பொருளாதார தடைகளை விதித்தும் வருகின்றன. ஆனால், உக்ரைன் மீதான போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வரவில்லை. உக்ரைன் – ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்தியா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஐ.நா பொதுசபையில் நடந்த வாக்கெடுப்பில் நடுநிலையை வகித்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் மீது வருத்தம் கொண்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க வணிகத் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ‘ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒற்றுமையாக செயல்படுவதை பாராட்டுகிறேன்.
‘குவாட்’ உறுப்பினர்களில் ஒருவரான இந்தியா, ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான இந்தியா, உக்ரைன் – ரஷ்ய விவகாரத்தில் விதிவிலக்கில் உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் சற்றே நடுங்குகிறது’ என்றார்.