
இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது.
இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பிடுவதற்காக 2019 ஜூலை 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த ஒப்பந்தம் இதுவரை கையொப்பமிடப்படவில்லை.
அதனால், விமான சேவை நடவடிக்கைகள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் குறித்த விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.