inter Parliament Union IPU இன் 144 ஆவது அமர்வு

இந்தோனோசியாவின் பாலியில் inter Parliament Union IPU இன் 144 ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது, இதில் இலங்கையை சேர்ந்த நாடாளுமன்ற குழுவானது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சென்றுள்ளது .

மேற்படி குழுவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் .

நான்கு நாள் நிகழ்வாக மேற்படி நிகழ்வு நடைபெறுகிறது .நிகழ்வில் இளைஞர்கள் தொடர்பான பல விடயங்களுடன் காலநிலை மாற்றம் மற்றும் உலகப் பொருளாதாரம் போன்ற பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE