இலங்கையின் வெளிநாட்டு கடன் 53,000 கோடியை தாண்டியுள்ளது. மின் உற்பத்தி சரிவு, எரி பொருள் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பு என பல வழிகளிலும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பணமதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருவதால் டொலர் வர்த்தகத்தை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பழங்கள், பால் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், வாகனங்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
கோட்டபாய ராஜபக் ஷ தலைமையிலான அரசு இலங்கையை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளனர்.
பொருளாதார சீரழிவுக்கு பொறுப்பேற்று கோட்டபய ராஜபக்ஷே பதவி விலக வலியுறுத்தி ஐக்கிய மக்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
இலங்கையின் பணமதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.