மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் , இது தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வழங்கும் 500 மில்லியன் டொலர் கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை 12 மாதங்களை விட நீடிக்க முடியாது என இந்திய எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் கடன் மற்றும் 400 மில்லியன் டொலருக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ள நிலையிலேயே , எரிபொருளுக்கான கடன் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.