கனிமவளங்களின் பெயரால் தமிழர்களது நிலங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக சிறீதரன் எம்.பி பாராளுமன்றில் தெரிவித்தார்.
மேலும் வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் அரச அதிகாரிகளுக்கு தெரியாமல் உயர்மட்ட ஆதரவுடன் ஆய்வு பணிகள் நடைபெறுகின்றது. இவை தமிழர் பகுதிகளை திட்டமிட்டு அபகரிப்பதற்கா ஒரு செயற்பாடாகவே எமக்கு தெரிகிறது என தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் யாழ்.வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் அருள்குமாரன் ஜோன்ஜிப்ரிகோ இளவாலை தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Shritharan Sivagnanam) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினரதும் அரச ஆதரவு அல்லக்கை அரசியல்வாதிகளினதும் அராஜகங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தின அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.