![அமெரிக்கா உதவி இராஜாங்க செயலர் கொழும்பு வருகை](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/03/விக்ரோரியா.jpg?fit=800%2C451&ssl=1)
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் விக்ரோறியா நுலன்ட் எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு வரவுள்ளதாக அறியமுடிகிறது இவர் அரசாங்க, எதிர்க்கட்சி மற்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அவருடன், இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு அதிகாரியும், கொழும்பு வரவுள்ளார் என்று கூறப்படுகிறது.
அரசாங்கத் தரப்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைச் சந்திக்கவுள்ள, விக்ரோறியா நுலன்ட், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.