பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கியத் தலைவர்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் ரஷிய ஜனாதிபதி புட்டினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன.
தற்போது விளாடிமிர் புட்டினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை புதினின் மெழுகு சிலை கிடங்கு ஒன்றில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சிலைகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த புதினின் சிலைக்கு பதிலாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மெழுகு சிலையை வைக்க அருங்காட்சியகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.