
இலங்கையில் இருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஒரே ஹோட்டல்களிலோ அல்லது அதே பிரதேசங்களிலோ தங்கியிருப்பதால் அவர்களுக்கு இடையே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஹோட்டல்களை கண்காணித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் காரணமாக பல சுற்றுலாப் பயணிகள் வீடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கித் தவிக்கின்றனர். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஏறக்குறைய 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளும் 10,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் தற்போது இலங்கையில் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.