![ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/02/1-ukkk.jpg?fit=696%2C377&ssl=1)
ரஷ்யா மற்றும் யுக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உத்தரவு மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று மாலை தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய அவர், “மேற்கத்திய நாடுகள் நம்மை விரோதிகளாகக் கருதுகின்றன.
பொருளாதார ரீதியாக நிறைய தடைகள் நம் மீது விதிக்கப்பட்டுள்ளன. இவை சட்டவிரோதமானவை.
நேட்டோ நாடுகளும் நம் நாட்டுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பரப்பி வருகின்றன.
அதனால், பாதுகாப்பு அமைச்சர் அணு ஆயுத தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைக்குமாறு நான் உத்தரவிடுகிறேன்” எனக் கூறினார்.
இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.
இந்த உத்தரவும், இசைவும் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் ஏற்படுத்தியுள்ளன.
உலகிலேயே ரஷ்யாவிடம் இரண்டாவது பெரிய அணு ஆயுத பலம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.