ரஷ்ய படைகளின் தாக்குதல் திட்டத்தை முறியடித்து விட்டதாக உக்ரைன் அதிபர் விலடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: கீவ் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நகரை பாதுகாக்க முன்வருபவர்களுக்கு ஆயுதங்களை தர தயாராக உள்ளோம். இந்த போரை நிறுத்த விரும்புகிறோம். அப்போது தான் அமைதியாக வாழ முடியும். ரஷ்யாவின் தாக்குதல் திட்டத்தை முறியடித்துள்ளோம். போரை எதிர்த்த ரஷ்யர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். உங்களிடம், எங்களிடமும், உலகத்திடம் பொய் சொல்பவர்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.