
இன்று 26/02/2022 மாலை 3.30 மணியளவில் திருகோணமலையில் இடம்பெறும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து போராட்டத்தில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் கலந்துகொண்டு கையொப்பம் இட்டுள்ளார் .
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை முழுவதும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்று மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து பெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் .ஏ .சுமந்திரன் ,இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளனர் .