செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உரிய நேரத்தில் உரிய தீர்மானம் எட்டப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளரான நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களைக் கலைக்கும் அதிகாரம் மற்றும் நிறுவனங்களின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு மட்டுப்படுத்துவது அல்லது அதிகரிப்பது ஆகிய அதிகாரங்கள் அமைச்சருக்கே வழங்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் அதிபரிடமே வழங்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.