தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை – பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக நாகை, காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்கள் கடந்த ஜனவரி 31-ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள்.

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்கரை படையினர் கடந்த மாதம் 31-ம் தேதி கைது செய்தனர். 21 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 21-ம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்றுடன் சிறைக்காவல் முடிந்த நிலையில் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் 21 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்ப உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE