உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என மழுப்பி வரும் ரஷ்யா, பெலராஸ் நாட்டு படைகளுடன் இணைந்து தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக ரஷ்யா நேற்று உக்ரைன் எல்லையில் அணு ஆயுத தளவாடங்களுடன் போர் பயிற்சியை நடத்தியது.
இதனால், ரஷ்யா – உக்ரைன் எல்லையில் உச்ச கட்ட பதற்றம் நீடிக்கும் நிலையில் உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ரஷ்ய ரணுவம் அறிவித்துள்ளது.