பிரபாகரன் சிறந்த போர் வீரன் – இறுதிவரை போராடியே அவர் மடிந்தார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப் போரில் சரணடையவில்லை எனவும் அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை எனவும் அவா் இறுதிப் போர்க்களத்தில் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார். எனவும் முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளாா்.

வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பிலேயே இறுதிப் போரில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு தொிவித்துள்ளாா்.
மேலும் பிரபாகரனின் சாவை வைத்து அன்று தொடக்கம் இன்று வரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர் எனவும் இராணுவத்தினருடனான நேரடி மோதலிலேயே பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உண்மை எனவும் . அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர் எனவும் சரத் பொன்சேகா தொிவித்துள்ளாா்.

பிரபாகரன் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவர். எனினும், அவர் சிறந்த போர் வீரன். அதனால் அவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு எனத் தொிவித்த சரத் பொன்சேகா பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என விரும்பிய இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை அரசுக்கு அன்று அழுத்தமும் கொடுத்த போதும் பிரபாகரன் எந்தத் தரப்பிடமும் சிக்காமல் இறுதி வரைப் போராடியே உயிாிழந்தாா் எனவும் சரத் பொன்சேகா தொிவித்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE