
நாட்டின் பொருளாதாரம் மீள வழமைக்கு திரும்பியதன் பின்னர், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டு மார்ச் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.