
இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்து, விஸாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்ட நிலையில், சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டிற்கு வருகைத் தந்ததன் பின்னர் விஸாவை (ON ARRIVAL VISA) பெற்றுக்கொள்ளும் நடைமுறை இதற்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் தலைவர் கிமாலி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.